டி20 போட்டியில் ‘ஒட்டுமொத்த ரெக்கார்டையும்’ பிரேக் செய்து.. ‘தெறிக்கவிட்ட இந்திய வீரர்..’

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Aug 06, 2019 06:36 PM

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது இந்திய அணி.

4 world records held by Rohit Sharma in T20 Internationals

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியின் நடுவே மழை குறுக்கிட்டதால் டிஎல்எஸ் முறையில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் ரோஹித் ஷர்மா 6 பவுண்டரி, 3 சிக்சர் அடித்து 51 பந்தில் 67 ரன்கள் குவித்துள்ளார்.

இந்தப் போட்டியின் மூலம் அவர் டி20 போட்டிகளில் 2422 ரன்கள் அடித்து அதிக ரன் சேர்த்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதோடு 107 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற பெருமையையும் ரோஹித் பெற்றுள்ளார்.

மேலும் டி20 போட்டிகளில் 21 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்து அதிக முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். ஏற்கெனவே 4 சதங்களுடன் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் ரோஹித் ஷர்மா வசம் உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags : #INDVSWI #TEAMINDIA #ROHITSHARMA #RECORD