‘மறுபடியும் 4 -வது இடத்துக்கு வந்த சிக்கல்’.. ‘லிஸ்டில் 4 வீரர்கள்’.. ஆனா இவருக்கு கிடைக்கதான் அதிக வாய்ப்பு இருக்கு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 07, 2019 09:04 PM

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் 4 -வது ஆர்டரில் விளையாட உள்ள வீரர் குறித்து கேள்வி எழுந்துள்ளது.

1st ODI With Shikhar Dhawan back, KL Rahul could be back at No 4

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. உலகக்கோப்பை தொடரில் இருந்தே இந்திய அணியில் நிலவி வந்த 4 -வது ஆர்டர் பிரச்சனை தற்போதும் எழுந்துள்ளது.

இந்த லிஸ்டில் மணிஷ் பாண்டே, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேதர் ஜாதவ் இடம்பெற்றுள்ளனர். இதில் கூடுதல் ஆல்ரவுண்டர் தேவை எனும் பட்சத்தில் கேதர் ஜாதவ் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் களமிறக்கப்படாத ஸ்ரேயாஸ் ஐயர் ஒருவேளை நாளை நடைபெறும் போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளது.

ஆனாலும் 4 -வது ஆர்டரில் கே.எல்.ராகுலே களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்ககப்படுகிறது. உலகக்கோப்பையில் ஏற்பட்ட காயத்துக்குபின் ஷிகர் தவான் அணிக்கு திரும்பியுள்ளார். அதனால் ரோஹித் ஷர்மாவுடன் சேர்ந்து தொடக்க ஆட்டக்காரராக ஷிகர் தவான் களமிறங்குவார். அடுத்ததாக 3 -வது இடத்தை விராட் கோலி நிரப்புவார். ஒருவேளை ராகுல் 4 -வது ஆர்டரில் இறங்கினால், அவருக்கு அடுத்தாக ரிஷப் பந்த் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

Tags : #KLRAHUL #BCCI #TEAMINDIA #INDVWI #ODI