‘முக்கிய வீரர் நீக்கம்’.. ‘2 இளம் வீரர்களுக்கு வாய்ப்பு’.. இந்திய அணியில் அதிரடி மாற்றம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 06, 2019 09:54 PM

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3 -வது டி20 போட்டியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

IND vs WI 3rd T20I: Rohit Sharma rested, Rahul Chahar make debut

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி இன்று கயானா நகரில் உள்ள ப்ரோவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வென்று 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது. இதனால் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி இந்தியாவும், வொயிட் வாஷை தவிர்க்க வெஸ்ட் இண்டீஸும் முனைப்பு காட்டி வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா மற்றும் ஜடேஜாவுக்கு இப்போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் ரோஹித் ஷர்மாகவுக்கு பதிலாக கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குகிறார். மேலும் தீபக் சஹார் மற்றும் ராகுல் சஹார் ஆகிய இரு இளம் வீரர்களுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. இதனை அடுத்து இன்றைய போட்டியில் மழை குறிக்கிட்டதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்துள்ளது.

Tags : #BCCI #ICC #TEAMINDIA #INDVWI #T20I #ROHITSHARMA #RAHULCHAHAR