‘வெஸ்ட் இண்டீஸ் -க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி’.. இந்திய அணிக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சவால்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 08, 2019 12:01 PM

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் -க்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு பெரிய சவால் காத்துள்ளது.

India set for their first ODI against Windies in Providence stadium

வெஸ்ட் இண்டீஸ் -க்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய நிலையில் அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு அமெரிக்காவின் கயானாவில் உள்ள ப்ரோவொடென்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த மைதானத்தில் இதுவரை 21 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 3 முறை 300 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டிள்ளது. அதிகபட்சமாக கடந்த 2017 -ம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 309 ரன்களை அடித்துள்ளது. இதுவரை இந்த மைதானத்தில் 15 போட்டிகளில் விளையாடியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்திய அணி இதுவரை இந்த மைதானத்தில் விளையாடியதில்லை. வெஸ்ட் அணிக்கு மிகவும் பழக்கப்பட்ட மைதானம் என்பதால் இந்திய அணிக்கு சவாலானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #BCCI #TEAMINDIA #INDVWI #ODI #GUYANA #PROVIDENCE #STADIUM