‘19 ரன்ல பாகிஸ்தான் வீரர் ரெக்கார்ட் காலி’.. ‘1 சதம் அடிச்சா கோலிதான் நம்பர் 1’.. ‘ஜாக்பாட்’ அடிக்க காத்திருக்கும் கேப்டன்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 08, 2019 08:07 AM

இன்று நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாட உள்ள விராட் கோலிக்கு பல சாதனைகள் காத்துள்ளன.

IND vs WI 1st ODI: Virat Kohli on verge of breaking multiple records

இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் -க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை வொய்ட் வாஷ் செய்து இந்தியா அசத்தியது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.

இப்போட்டியில் விராட் கோலி 19 ரன்களை அடிக்கும் பட்சத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் உள்ள பாகிஸ்தான் வீரர் ஜாவித் (1930) சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளது. விராட் கோலி இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 1912 ரன்கள் அடித்துள்ளார்.

மேலும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்த இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையான ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் விராட் கோலியும், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் டேஸ்மெண்ட் ஹெயின்ஸ் ஆகிய இருவரும் உள்ளனர். இருவரும் தலா 2 சதங்களை அடித்துள்ளனர். இப்போட்டியில் கோலி சதம் அடிக்கும் பட்சத்தில் அந்த சாதனையை தனதாக்கி கொள்ள வாய்ப்பு உள்ளது.

Tags : #VIRATKOHLI #BCCI #TEAMINDIA #CRICKET #INDVWI #ODI