'பாத்தீங்கள்ல்ல... இந்த ஆட்டத்த'.. 'அணியில் இடமில்ல'.. வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக இரட்டை சதம்.. விளாசிய இந்திய வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Aug 09, 2019 01:04 PM
இந்திய அணியில் எடுக்கப்படாத வீரரான, ஷுப்மன் கில், வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணி மோதிய 3-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்துள்ளார்.

அதிகாரப்பூர்வமற்ற இந்த போட்டியில் விளையாட இந்திய ஏ அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதோடு, 3 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் விளையாண்டது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் ஏற்கனவே வென்றது இந்தியா.
இந்நிலையில் 3வது போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா ஏ அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை முதல் இன்னிங்ஸில் 194 ரன்களுகு சுருட்டினர். இந்த இன்னிங்ஸில் டக் அவுட்டான கில், அடுத்த அரைசதம், சதம், 150 என அடித்துத் தூக்கியுள்ளார். இவருடன் ஹனுமா விஹாரியும் பார்ட்னர்ஷிப் போட்டு சதம் அடித்தார்.
ஆனால் ஷுப்மன் கில் 250 பந்துகளில் 204 ரன்கள் எடுத்தும், ஹனுமா விஹாரியும் 118 ரன்கள் ம் இருவரும் அசராமல் களத்தில் நின்றதால், இரண்டாவது இன்னிங்ஸில் 365 ரன்களுக்கே இந்திய ஏ அணி டிக்ளேர் செய்தது. உலக கோப்பைக்கு முன் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் எடுக்கப்பட்ட கில், இந்திய ஏ அணியில் சிறப்பாகவே ஆடினார்.
வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான, அதிகாரப்பூர்வமற்ற இந்திய ஏ அணியின் வீரராக இரட்டை சதத்தை விளாசிய கில்லிடம் இருந்த அந்த உத்வேகமும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான அதிகாரப் பூர்வமான இந்திய ஒருநாள் அணியில் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதால், தன்னை நிரூபித்துக் காட்டியிருக்கும் அவரின் உந்துதலும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
