‘யாரும் தொடாத பாகிஸ்தான் வீரரின் 26 வருட சாதனை’.. 19 ரன்னில் முறியடிக்க காத்திருக்கும் ‘கிங்’ கோலி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 11, 2019 05:15 PM

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 -வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பாகிஸ்தான் வீரரின் சாதனையை 19 ரன்னில் முறியடிக்க வாய்ப்பு உள்ளது.

Kohli needs 19 runs more to break Javed Miandad’s 26 year old record

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் -க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், நடந்து முடிந்த டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது.

முன்னதாக கயானாயில் நடந்த இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் -க்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (11.08.2019) போர்ட் ஆப் ஸ்பெயின் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் விராட் கோலி 19 ரன்னில் பாகிஸ்தான் வீரரின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பட்டியலில் பாகிஸ்தான் ஜாவித் மியான்தத் (1930) கடந்த 26 ஆண்டுகளாக நீடித்து வருகிறார். இந்த சாதனையை முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி (1912) முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழையால் போட்டி தடைப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் விராட் கோலி இந்த சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #VIRATKOHLI #BCCI #TEAMINDIA #INDVWI #ODI #JAVED MIANDAD