‘ஹாட்ரிக் வெற்றியை நோக்கி இந்தியா’.. அணியில் சில முக்கிய மாற்றங்கள்..! சூசகமாக சொன்ன கோலி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 06, 2019 12:21 PM

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

Virat Kohli hints at change in combination for third T20I

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 -வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று கயானா நகரில் உள்ள ப்ரோவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் இந்தியா டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதனை அடுத்து ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி தீவிர பயிற்சியை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பேசிய கோலி, ‘போட்டியை ஜெயிப்பதுதான் முக்கியம். இரண்டு போட்டிகளில் வென்று தொடரைக் கைப்பற்றிவிட்டோம். அதனால் புதிய வீரர்கள் விளையாட வாய்ப்பு உள்ளது’ என கோலி தெரிவித்துள்ளார். இதில் ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் சஹார் மற்றும் தீபக் சஹார் உள்ளிட்டோருக்கு வீரர்களுக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #VIRATKOHLI #TEAMINDIA #INDVWI #T20I