‘அக்கா.. அந்த ப்ராமிஸ் நடக்காமலே போச்சே’... ஸ்மிருதி இரானியின் உருக்கமான ட்வீட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Aug 07, 2019 12:56 PM

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உருக்கமான ட்வீட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

Smriti Irani on \'Didi\' Sushma Swaraj\'s Unfulfilled Promise

பாஜகவின் மூத்த பெண் தலைவராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்தவர் சுஷ்மா ஸ்வராஜ். இவர் டெல்லியின் முன்னாள் முதலமைச்சராகவும் இருந்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த செவ்வாய்கிழமையன்று இரவு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பால் காலமானதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்தனர். இவரது மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக ஒரு ட்வீட்டை பதிவு செய்திருக்கிறார். அதில், ‘அக்கா... நீங்கள் என்னையும், உங்கள் மகள் பன்சூரியையும் மதிய உணவிற்கு, ஓட்டல் ஒன்றிற்கு அழைத்து செல்வதாக கூறியிருந்தீர்கள். அதுவும் கொண்டாட்டம் நிறைந்த மதிய உணவு வேளையில்... இதற்காக சிறப்பான உணவகம் ஒன்றை தேர்வு செய்யுமாறு கூறியிருந்தீர்கள்... ஆனால் அந்த வாக்குறுதியை நீங்கள் நிறைவேற்றாமலேயே சென்று விட்டீர்கள்’ என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது பலரை கண்கலங்க வைத்துள்ளதுடன், பலரால் பகிரப்பட்டு வருகின்றது.

Tags : #SMRITIIRANI #SUSHMA #SWARAJ #BJP #TWEET