'என் இந்திய ரசிகர்கள்லாம் எங்க இருக்கீங்க?'.. 'நான் ரொம்ப அதிர்ஷ்டமானவள்'.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Jul 23, 2019 02:00 PM

டென்னிஸ் வீரர் ஸ்டீபன் அமிர்தராஜ்  மற்றும் டென்னிஸ் வீராங்கனை அலிசன் ரிஸ்க் இருவரின் திருமணமும் அமெரிக்காவில் விமர்சையாக நடைபெற்றது.

tennis player alison riske wedding dance goes viral

விம்பிள்டன் டென்னிஸ் வீரர் அஷோக் அமிர்தராஜ், சென்னையில் பிறந்து தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆனவர். இவர் டென்னிஸ் வீரர் மட்டுமல்லாத திரைப்பட தயாரிப்பாளரும் கூட. இவரது சகோதரர்களான விஜய் அமிர்தராஜ், ஆனந்த் அமிர்தராஜ் ஆகியோரும் டென்னிஸ் வீரர்கள்.

இவரது மகன் ஸ்டீபன் அமிர்தராஜ், பிரபல டென்னிஸ் வீராங்கனை அலிசன் ரிஸ்க்கினை  காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். அமெரிக்காவில் நடைபெற்ற இவரது திருமண நிகழ்ச்சியில் மணப்பெண்ணான அலிசன் ரிஸ்க்கும் அவரது சகோதரியும் இணைந்து  ‘பார் பார் தேகோ ’ என்கிற இந்தி படத்தில் இடம் பெறும், ‘நாச்சே நே சாரே’ என்கிற பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர்.

இதுபற்றி பதிவிட்ட அலிசன், ‘அமிர்தராஜ் குடும்பத்தில் அதிகாரப்பூர்வமாக இணைகிறேன். இதனால் நான் அதிர்ஷ்டமானவளாகிறேன். என்னுடைய இந்திய ரசிகர்கள் எங்கே? உங்களுடைய அதீத அன்பினை வெல்லும் முயற்சிக்காக, முடிந்தவரை சிரத்தையாக இந்திப் பாடலுக்கு நடனம் ஆடியிருக்கேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இவருக்கு இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Tags : #STEPHENAMRITRAJ #RISKE4REWARDS #TENNIS #VIDEOVIRAL