'ஆஹா.. இதுக்குப் பேருதான் பணமழையா?'.. என்னயா நடக்குது இங்க? வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Jul 12, 2019 12:38 PM

பணமழை என்கிற வார்த்தைக்கு அர்த்த வடிவம் பலருக்கும் தெரியும். ஆனால் அதற்கு காட்சி வடிவம் கொடுத்தால், அதைக் காண்போரின் செயல் என்னவாக இருக்கும் என்கிற வீடியோ வைரலாகி வருகிறது.

money gets released after truck\'s door opened video

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டாவில், சாலைகள் எங்கும் பணம் சிதறிக்கிடந்திருந்தது. காற்றில் பறந்து பணமழை போல் காட்சியளித்த இந்த சாலையில் சென்ற அனைவருமே, இறங்கி ஓடி பணத்தை அள்ளத் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவ இடத்துக்கு விரைந்த டின்வூடி ஏரியா போலீஸார் விசாரித்துள்ளனர்.

அதன்படி, இந்த வழியே பணத்தை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்த ட்ரக் ஒன்றின் கதவு எதிர்பாராத விதமாகத் திறந்துவிட்டதால், ஏறக்குறைய 68 லட்ச ரூபாய் பணம் சாலையில் பறக்கத் தொடங்கியது. அதனால் அவ்வழியே சென்றவர்கள் காரில் இருந்து இறங்கி பணத்தை அள்ளிச் சென்றுள்ளனர்.

இந்த வீடியோவைக் கண்ட பலரும், ‘எங்க ஊர்லலாம் இப்படி நடக்க மாட்டீங்குதே’ என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Tags : #ATLANTA #MONEY #VIDEOVIRAL