'கவிழும் லாரி'.. ‘இடுக்கில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டி’.. பரிதாப சம்பவம்..வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Jun 14, 2019 04:29 PM
சரக்கு லாரி ஒன்று நிலைத்தடுமாறி கவிழும்போது அதனடியில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகில் உள்ள பவானி சாகர் பகுதியில் ஒரு தனியார் லாரி அட்டைப்பெட்டிகளைச் சுமந்தபடி வந்தபோது இருசக்கர வாகனத்தில் அவ்வழியே வந்த நபர் மீது மோதியதில் அந்த நபர் பலியாகியுள்ளது அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரவு நேரங்களில் சத்திய மங்கலம் பகுதியில், சரக்கு லாரிகள் வெகுவேகமாக வருவது சகஜம்தான் என்றாலும், திடீரென கட்டுப்பாட்டை இழந்து இந்த லாரி கவிழ்ந்தபோதுதான், அவ்வழியே இருசக்கர வாகனத்தில் பழனி என்கிற அந்த நபர் அங்கு வந்துள்ளார்.
அப்போது அவர் மீது கவிழ்ந்த லாரியால் அவருக்கு சம்பவ இடத்திலேயே பலத்த படுகாயம் ஏற்பட்டது. அதன் பிறகு அவர் அருகில் இருந்த மக்களால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் பழனி சிகிச்சைப் பலனிறி உயிரிழந்துள்ளார். விபத்து நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ பதைபதைக்க வைக்கிறது.
