ஒரு கையில் ‘பேட்’ இன்னொரு கையில் ‘குழந்தை’.. ‘இதுதான் என் வாழ்க்கை’!.. நெட்டிசன்களை உருகவைத்த சானியா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 13, 2020 12:33 PM

ஒரு கையில் டென்னிஸ் பேட், மற்றொரு கையில் குழந்தையுடன் சானியா மிஸ்ரா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sania Mirza\'s life in a picture with son Izhaan and a tennis racket

துபாயில் நடைபெற்ற ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் சானியா மிஸ்ரா-அங்கிதா ஜோடி விளையாடியது. இதில் இந்தோனேஷியா இணையை வீழ்த்தி சானியா-அங்கிதா ஜோடி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் முதல்முறையாக பெடரேஷன் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

இந்த போட்டியின் வெற்றிக்கு பின்னர் சானியா மிஸ்ரா, ஒரு கையில் டென்னிஸ் பேட், மற்றொரு கையில் தனது குழந்தை இஸ்ஸானுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில், ‘இந்த புகைப்படம் போதும் என் வாழ்க்கை பற்றி கூற’ என்றும் தனக்கு தூண்டுதலாக இருப்பது தன் மகன் இஸ்ஸான் என்றும் பதிவிட்டுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு சானியா மிஸ்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இரண்டு வருட இடைவெளிக்குப்பின் மீண்டும் சானியா டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : #SANIAMIRZA #IZHAAN #FEDCUP #VIRAL