VIDEO: ‘பாராகிளைடிங்’ பண்ணும்போது நடந்த அசம்பாவிதம்.. ‘உயிருக்கு போராடிய வீரர்’.. பரபரப்பு நிமிடங்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பாராகிளைடிங் வீரர் ஒருவர் 70 அடி உயர மரத்தில் சிக்கிக்கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பாராகிளைடிங் வீரர் ஒருவர் வானில் பறந்தபோது எதிர்பாராதவிதமாக 70 அடி உயர மரத்தில் சிக்கிக்கொண்டார். இதனால் அங்கிருந்து வெளியேற முடியாமல் நீண்ட நேரமாக மரத்தின் உச்சியிலேயே தவித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மீட்புப்படையினர் ஹெலிகாப்டரில் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
பின்னர் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் இறங்கிய மீட்புப்படை வீரர், மரத்தில் சிக்கியிருந்த பாராகிளைடிங் வீரரை பத்திரமாக மேலே தூக்கி மீட்டனர். இந்த பரபரப்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Tags : #PARAGLIDER #RESCUED #VIRAL
