நாங்க ‘ஷாக்கே’ ஆகலையே... கைக்கு வந்த ‘கேட்ச்’... பிரபல வீரர் செய்த காரியத்தால் ‘வறுத்தெடுக்கும்’ ரசிகர்கள்... ‘வைரல்’ வீடியோ...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Mar 07, 2020 06:24 PM

பாகிஸ்தான் டி20 சூப்பர் லீக்கில் காம்ரான் அக்மல் கைக்கு வந்த பந்தை தவறவிடும் வீடியோ வைரலாகி வருகிறது.

Video Kamran Akmal Drops Easy Catch in PSL2020

பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் டி20 சூப்பர் லீக் தொடரில் பெஷாவர் ஸால்மி அணிக்காக விளையாடி வரும் காம்ரான் அக்மல் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது கைக்கு வந்த பந்தை தவறவிட்டு ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.

போட்டியின் 14வது ஓவரின்போது ஹசன் அலி வீசிய பந்தை சொஹைல் கான் தூக்கி அடித்துள்ளார். அப்போது அந்தப் பந்தை துரத்திச் சென்ற காம்ரான் அக்மல் கைக்கு வந்த பந்தை கேட்ச் பிடிக்காமல் தவறவிட்டுள்ளார். இதையத்து அவர் கேட்சை தவறவிட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை, அவர் ஏன் அணியில் இல்லை எனக் கேட்பவர்களுக்கு இந்த வீடியோவைக் காட்டுங்கள் என ரசிகர்கள் காம்ரான் அக்மலை வறுத்தெடுத்து வருகின்றனர்.

 

 

Tags : #CRICKET #PSL #PAKISTAN #KAMRANAKMAL #PSL2020 #CATCH #VIDEO #VIRAL