‘உசைன் போல்ட்’ கூட தப்பிக்க முடியாது... ‘80 கிமீ’ வேகத்தில் கிராமத்திற்குள் புகுந்து... பதறி ‘ஓடவிட்ட’ சிங்கம்... ‘வைரல்’ வீடியோ...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Mar 10, 2020 01:13 PM

குஜராத்தில் சிங்கம் ஒன்று கிராமத்திற்குள் புகுந்து ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Even Usain Bolt Cant Escape Viral Video Of Charging Lion

குஜராத் மாநிலத்தில் உள்ள மாதவ்பூர் என்ற கிராமத்திற்குள் சிங்கம் ஒன்று புகுந்து ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிங்கம் மக்களைப் பார்த்து பயந்து ஓடுவதுபோல தெரியும் நிலையில், மக்கள் கூட்டமும் அந்த சிங்கத்தைப் பார்த்து பதறியடித்து ஓடுகின்றனர்.

அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள இந்திய வனத்துறை அதிகாரியான சுஷந்தா நந்தா, “மணிக்கு 80 கிமீ வேகத்தில் ஒருவர் பாய்ந்து வருவதை நினைத்துப் பாருங்கள். உலகின் அதிவேக மனிதனான உசைன் போல்ட் கூட இந்த வேகத்தின் முன் தப்ப முடியாது. இந்தச் சூழலிலும் சகிப்புத்தன்மை என்பதை இந்தியாவில்தான் பார்க்க முடியும்” என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

 

Tags : #LION #VIRAL #VIDEO