VIDEO: ‘தல’ய பாக்கணும்.. எகிறி குதிச்சு உள்ளே போன ரசிகர்.. ‘தோனி..தோனி’!.. விண்ணைப் பிளந்த ‘விசில்’ சத்தம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 06, 2020 07:26 AM

தோனியைப் பார்க்க சேப்பாக்கம் மைதானத்துக்குள் நுழைந்த ரசிகரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Fan shake hands with MS Dhoni at Chepauk stadium video goes viral

ஐபிஎல் டி20 போட்டியின் 13வது சீசன் வரும் மார்ச் மாதம் 29ம் தேதியில் இருந்து நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன. இதற்காக சென்னை வந்துள்ள சிஎஸ்கே வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை வந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியை காண தினமும் சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். உலகக்கோப்பை தொடருக்கு பின் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின் தோனி விளையாட இருப்பதால் அவரை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த தோனியை காண தடையைத் தாண்டி ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் நுழைந்தார். பின்னர் தோனியிடம் கை குலுக்கிவிட்டு திரும்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதேபோல் கடந்த ஆண்டும் ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் தோனியைப் பார்க்க ஓடி வந்தார். அப்போது அந்த ரசிகருடன் தோனி ஓடி பிடித்து விளையாடிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

Tags : #CSK #MSDHONI #IPL #FAN #VIRAL #CHEPAUKSTADIUM