மும்பையில் டி20 போட்டியில்... கேப்டன் சச்சினுடன் மோதும்... ஜாம்பவான் லாரா... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்... எப்போ தெரியுமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக நடைபெறவுள்ள உலக டி20 தொடரின் முதல் போட்டியில் சச்சின் தலைமையிலான இந்திய அணி, லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதவுள்ளதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இந்தியாவில் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால், சாலை பாதுகாப்பு விழப்புணர்வுக்காக உலக டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளின் முன்னாள் ஜாம்பவான்கள் மோதுகின்றனர்.
மொத்தம் பதினோரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி கேப்டனாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக லாராவும் விளையாட உள்ளனர். இவர்கள் மட்டுமின்றி சச்சின், சேவாக், ஜாகீர் கான், யுவராஜ் சிங், சந்திரபால், லாரா, ஜாண்டி ரோட்ஸ், முரளிதரன், தில்ஷான், பிரெட் லீ, அஜந்தா மென்டிஸ் உள்பட பல முன்னாள் நட்சத்திர வீரர்கள் விளையாடுகின்றனர்.
முதல் போட்டியாக சச்சினின் இந்தியா லெஜண்ட்ஸ் அணியும், லாராவின் மே.இ.தீவுகள் லெஜண்ட்ஸ் அணியும், வரும் மார்ச் 7-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றனர். மார்ச் 22-ல் மும்பை பிரபர்ன் ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. அனைத்துப் போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 7 மணிக்குத் தொடங்கும் இதன் நேரலை கலர்ஸ் சினிபிளெக்ஸ் மற்றும் கலர்ஸ் கன்னட சினிமா ஆகியவற்றில் ஒளிபரப்பப்படுகிறது. இந்த தொடரில் சச்சின் மற்றும் சேவாக்கின் தொடக்க ஆட்டத்தை மீண்டும் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளளனர்.
போட்டி அட்டவணை (அனைத்துப் போட்டிகளும் மாலை மணி 7 மணிக்குத் தொடங்கும்)
மார்ச் 7 : இந்திய லெஜண்ட்ஸ் - மே.இ.தீவுகள் லெஜண்ட்ஸ் (மும்பை, வான்கடே)
மார்ச் 8: ஆஸி. லெஜண்ட் - இலங்கை லெஜண்ட்ஸ் (வான்கடே)
மார்ச் 10: இந்தியா லெஜண்ட்ஸ் - இலங்கை லெஜண்ட்ஸ் (பாட்டீல் ஸ்டேடியம், நவி மும்பை)
மார்ச் 11: மே.இ.தீவுகள் லெஜண்ட்ஸ் - தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் ( பாட்டீல் ஸ்டேடியம்)
மார்ச் 13: தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் - இலங்கை லெஜண்ட்ஸ் ( பாட்டீல் ஸ்டேடியம்)
மார்ச் 14: இந்தியா லெஜண்ட்ஸ் - தென் ஆப்பிரிக்க லெஜண்ட்ஸ் ( புனே)
மார்ச் 16: ஆஸி. லெஜண்ட்ஸ் - மே.இ.தீவுகள் லெஜண்ட்ஸ் (புனே)
மார்ச் 17: மே.இ.தீவுகள் லெஜண்ட்ஸ் - இலங்கை லெஜண்ட்ஸ் (புனே)
மார்ச் 19: ஆஸி. லெஜண்ட்ஸ் - தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் (நவி மும்பை)
மார்ச் 20: இந்தியா லெஜண்ட்ஸ் - ஆஸி. லெஜண்ட்ஸ் (புனே)
மார்ச் 22: இறுதிப் போட்டி - பிரபர்ன் ஸ்டேடியம், மும்பை.