இந்தியாவுக்குள் 'என்ட்ரியை' போட்டது 'கொரோனா' வைரஸ்... 2 பேருக்கு தனி அறையில் 'சிகிச்சை'... "எங்கே தெரியுமா?..."

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Jan 24, 2020 06:16 PM

சீனாவிலிருந்து இந்தியா திரும்பிய இருவரிடம் கொரோனா வைரஸ் அறிகுறியின் இருமல் தென்பட்டதால், அவர்களை மும்பை மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

Corona virus is a sign of 2 people returning to India

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாகச் சீனாவில் ஆயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது வரை 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் சீன அரசு தெரிவித்துள்ளது. இப்போது வரை இந்த வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட வில்லை. இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க குறைந்தபட்சம் 6 மாதங்களாவது ஆகும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதனிடையே பாதுகாப்பு நடவடிக்கையாக சீனா சென்றுவிட்டு நாடு திரும்பும் பயணிகளைச் சம்பந்தப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் தீவிர உடல் பரிசோதனைக்குப் பின்னரே நாட்டிற்குள் அனுமதிக்கின்றனர்.

இந்நிலையில் இந்தியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டதாக கூறி மும்பையில் 2 பேர் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நோய் அறிகுறிகளுடன் யாரேனும் மருத்துவமனைக்கு வந்தால் உடனே அரசுக்கு தெரிவிக்கும்படி அனைத்து மருத்துவமனைகளுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் சுற்றுலாப்பயணிகள் சீனா செல்வதைத் தவிர்க்கும்படியும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Tags : #CORONA VIRUS #VIRUS ATTACK #MUMBAI #ADMITTED #CHINA