நீண்ட நாட்களுக்குப் பிறகு களத்தில் கலக்கிய 'சச்சின்'... தனக்கே உரிய 'ஸ்டைலில்' பேட்டிங் செய்து 'அசத்தல்'... உற்சாகத்தில் குரல் எழுப்பிய 'ரசிகர்கள்'... 'வைரல் ஓவர்'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Suriyaraj | Feb 09, 2020 02:09 PM

ஆஸ்திரேலிய காட்டுத்தீக்கு நிதி திரட்டுவதற்காக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி மெல்பர்னில் இன்று நடைபெற்ற போட்டியில் ஒரு ஓவருக்கு மட்டும் விளையாடியது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Sachin played in Australia after a long time-Fans are excited

ஆஸ்திரேலிய காட்டுத் தீ-க்கு நிதிதிரட்டுவதற்காக அந்த நாட்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்கும் போட்டி மெல்பர்னில் இன்று நடைபெற்றது. ரிக்கி பாண்டிங் வழி நடத்திய அணியின் பயிற்சியாளராக சச்சின் டெண்டுல்கர் செயல்பட்டார்.

இந்தப் போட்டி நடக்கும் அதே மைதானத்தில் முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலிய மகளிர் அணி இங்கிலாந்தை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் எல்லிஸ் பெர்ரியின் கோரிக்கையை ஏற்று இப்போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ஒரு ஓவருக்கு மட்டும் பேட்டிங் செய்ய ஒப்புக் கொண்டார்.

போட்டி இடைவேளையின் போது ரசிகர்களின் பலத்த கரகோஷங்களுக்கு நடுவே சச்சின் டெண்டுல்கர் களமிறங்கினார். நீண்ட வருடங்களுக்குப் பிறக சச்சின் டெண்டுல்கரை களத்தில் பார்த்த ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினர்.

இந்த ஒரு ஓவரில் ஆஸ்திரேலிய அணி வீராங்கனைகளுடன் தீயணைப்பு வீராங்கணைகளும் பங்கேற்றனர். சச்சினுக்கு எல்லிஸ் பெர்ரி பந்து வீசினார். முதல் பந்திலேயே சச்சின் பவுண்டரி அடித்தார். தீயணைப்பு வீராங்கணை ஃபீல்டிங்கை தவறவிட்டதால் பந்து பவண்டரிக்கு சென்றது. இதையடுத்து, 3 பந்துகளை பெர்ரி வீசினார். சச்சின் தனக்கே உரிய ஸ்டைலில் பேட்டிங் செய்தது அங்கிருப்பவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. கடைசி 2 பந்துகளை கரா சதர்லேண்ட் வீசினார்.

ஒரு ஓவர் முடிவில் சச்சின் அனைவருக்கும் கைகொடுத்து விடைபெற்றார்.  சச்சின், தோள்பட்டை காயம் காரணமாக விளையாட கூடாது என்ற மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி பேட்டிங் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #SACHIN TENDULKAR #AUSTRALIA #BUSHFIRE #ELLYSE PERRY