"விராட் கோலியா? ஸ்டீவ் ஸ்மித்தா? யாரு பெஸ்ட்..." "சச்சின் டெண்டுல்கர் என்ன சொன்னார் தெரியுமா?..."
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் இந்த இருவரில் யார் சிறந்த பேட்ஸ் மேன் என்ற விவாதம் பல ஆண்டுகாள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த கேள்வி விவாதமாக துளிர்த்து சமூக வலைதளங்களில் கருத்து மோதல் ஏற்படும் அளவுக்கு சென்றுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பல்வேறு உதாரணங்களைக் கூறி பதிவிட்டு வருகின்றனர். இதில் பலரும் இந்திய கேப்டன் கோலிக்கு ஆதரவாக தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். ஒருநாள் போட்டிகள் மற்றும் டி-20 போட்டிகளில் கோலியை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என பலரும் பாராட்டி வருகின்றனர்.

இருப்பினும் டெஸ்ட்போட்டி என்று வரும் போது கோலியை விட ஸ்மித்தான் சிறந்த வீரர் என்ற முடிவுக்கே வருகின்றனர். இதுகுறித்து இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினிடம் கேட்கப்பட்ட போது அவர் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அவர், இரண்டு சமகால பெரிய வீரர்களான விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை ஒப்பிட்டுப் பார்த்து கருத்து கூற மறுத்துவிட்டார். நாம் ஒப்பீடுகளில் இறங்கக்கூடாது என்றும், அவர்கள் இருவரும் என்ன செய்கிறார்கள் என்பதை அனுபவிப்போம் என்றும் குறிப்பிட்டார் . அவர்கள் முழு கிரிக்கெட் உலகத்தையும் மகிழ்விக்கிறார்கள். இது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது, அது மட்டுமே முக்கியம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், ஒப்பீடுகளில் ஈடுபடுவதை தான் விரும்பவில்லை எனக் குறிப்பிட்ட சச்சின், மக்கள் தன்னை பல கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க முயற்சித்தார்கள் என்றும், அவர்களுக்குப் பதிலளிக்கும் போது எங்களை தனியாக விட்டுவிடுங்கள் என்று சொன்னதாகவும் குறிப்பட்டார்.
