யப்பா! என்ன டேஸ்ட்டு... உலகளவில் அதிகம் 'தேடப்பட்ட' உணவு இதுதான்... முதலிடத்தை பிடித்த 'இந்திய' நகரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Feb 03, 2020 11:28 PM

கடந்த 2019-ம் ஆண்டில் உலகளவில் அதிகம் தேடப்பட்ட உணவு எது? என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் பிரியாணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Chicken Biryani is the most searched Indian food Globally

இந்திய நாட்டில் பிரியாணிக்கு என்று தனித்த இடமிருக்கிறது. நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு சுவை, தனித்தன்மை கொண்டு பிரியாணி தயாரிக்கப்படுகிறது. எனினும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பிரியாணிக்கு அனைவரையும் அடிமைப்படுத்திய ஒரு உணவு என்றால் அது பிரியாணி தான் என்று தாராளமாக அடித்து சொல்லலாம். அந்தளவு இந்தியர்களின் வாழ்வொடு பிரியாணி பின்னிப்பிணைந்து விட்டது.

இந்த நிலையில் 2019-ம் ஆண்டில் உலகளவில் அதிகம் தேடப்பட்ட உணவுகள் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதில் ஒவ்வொரு மாதமும் 4.56 லட்சம் மக்கள் பிரியாணியை தேடி இருக்கின்றனர். பஞ்சாபின் புகழ்பெற்ற பட்டர் சிக்கன் 4 லட்சம் முறையும், சமோசா 3.9 லட்சம் முறையும், சிக்கன் டிக்கா 2.5 லட்சம் முறையும் தேடப்பட்டு இருக்கிறது.

இதையடுத்து பாலக் பன்னீர், தந்தூரி சிக்கன், சிக்கன் டிக்கா மசாலா, மசாலா தோசை, தால் மக்கானி, நாண் ஆகியவை இடம்பிடித்து இருக்கின்றன. மேலும் உலகளவில் உள்ள மக்கள் பஞ்சாப் உணவுகளைத்தான் அதிகம் தேடி இருக்கின்றனர். அதிகளவில் அதிலும் சைவத்தை விட அசைவத்தை தான் மக்கள் போட்டிபோட்டு அதிகளவில் தேடி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.