நீங்க 'டீடெயில்' கொடுத்தா மட்டும் போதும்... 'OTP' குறித்து கவலையில்லை...நாங்க பொறுப்பா 'சுட்ருவோம்'... வங்கி பாதுகாப்பை 'கேள்விக்குள்ளாக்கிய' கொள்ளை...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Feb 04, 2020 05:10 PM

பணபரிவர்த்தனை சேவை தொடர்பாக சில வசதிகள் தருவதாக போன் செய்த நபரிடம் வங்கி விவரங்களை அளித்த மருத்துவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.17 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் ஓடிபியை பகிர்ந்து கொள்ளாத போதும் தனது பணம் திருடப்பட்டிருப்பது குறித்து அவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

Rs 17 lakh loot from Mumbai doctor\'s bank account

மும்பையைச் சேர்ந்த மருத்துவர் பிரகாஷ் மகாதேவ். இவர் பாரத ஸ்டேட் வங்கியில் வங்கி கணக்கு வைத்துள்ளார். அவருக்கு கடந்த ஜனவரி 8-ம் தேதி தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. எதிர்முனையில் பேசிய நபர், தான் பணபரிவர்த்தனை சேவை தொடர்பாக சில வசதிகள் செய்து தருவதாகவும், அதற்கு வங்கிக் கணக்கின் விவரங்களை தருமாறும் கேட்டுள்ளார்.

வங்கி அதிகாரியைப்போல தெளிவாக பேசியதால் சந்தேகம் அடையாத மருத்துவர் பிரகாஷ், வங்கி கணக்கு தொடர்பான விவரங்களை அளித்துள்ளார். அதன் பின் அவருக்கு ஓடிபி எனப்படும் ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண் ஒன்று வந்துள்ளது. உடனே ஏதோ தவறு நடப்பதாக உணர்ந்த அவர் உடனடியாக வங்கிக்கு தொடர்பு கொண்டு தனது கணக்கை முடக்கியுள்ளார்.  அதன்பின் ஜனவரி 21ம் தேதி வங்கிக்கு சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வங்கிக் கணக்கிலிருந்து 17 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். குறிப்பாக தான் ஓடிபியை பகிர்ந்து கொள்ளாத போதும் பணம் எடுக்கப்பட்டது எப்படி என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஓடிபி என்னும் ரகசிய எண் பாதுகாப்பானது என நாம் நம்பி வரும் நிலையில் இப்படி ஒரு திருட்டு நடைபெற்றிருப்பது வங்கி பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

Tags : #MUMBAI #LOOT BANK #LOOT MONEY #BANK SECURITY