விளையாட்டு ஆலோசனைக் குழுவில் சேர்க்கப்பட்ட... முன்னாள் கேப்டன் மற்றும் சிஎஸ்கே வீரர்... விடுவிக்கப்பட்ட கிரிக்கெட் ஜாம்பவான்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jan 21, 2020 05:25 PM

அகில இந்திய விளையாட்டு ஆலோசகர் குழுவிலிருந்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் மற்றும் செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

CSK Harbhajan included in sports govt panel, Sachin Dropped

இந்திய விளையாட்டுத் துறையை மேம்படுத்துவது தொடர்பான விஷயங்களில், மத்திய அரசுக்கு உதவுவதற்காக, அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால், கடந்த 2015-ல் அகில இந்தியா விளையாட்டு ஆலோசனைக் குழு (AICS - All India Council of Sports) ஆரம்பிக்கப்பட்டது. இதில் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் முதல் கடந்த ஆண்டு மே மாதம் வரையிலான இக்குழுவின் முதல் பணிக் காலத்தில் மாநிலங்களவை உறுப்பினரான சச்சின் டெண்டுல்கர், விஸ்வநாதன் ஆனந்த் போன்றோர் ஆலோசகர் குழுவில் இடம்பெற்றார்கள்.

இந்நிலையில் ஏஐசிஎஸ் அமைப்பின் புதிய குழுவில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான ஹர்பஜன் சிங், முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்கள். மேலும் ஆலோசகர் குழுவின் உறுப்பினர் எண்ணிக்கை 27-லிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.  லிம்பா ராம், பி.டி. உஷா, தீபா மாலிக், அஞ்சலி பக்வத் போன்ற விளையாட்டு வீரர்கள் தற்போதைய ஆலோசகர் குழுவில் இடம் பெற்றுள்ளார்கள்.

Tags : #CSK #SACHIN TENDULKAR #VISHWANATHAN ANAND #HARBHAJAN SINGH #KRISHNAMACHARI SRIKKANTH