தம்பி இது 'டெஸ்ட் மேட்ச்' இல்லை... இந்திய வீரரை தாறுமாறாக ஓட்டித் தள்ளிய 'கிறிஸ் கெய்ல்'... அப்படி 'யாரை' கலாய்த்தார் தெரியுமா?...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய காட்டுத்தீ நிவாரணத்துக்காக நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் சாவகாசமாக டாட் பால் விளையாடிய இந்திய வீரரை வெஸ்ட் இன்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் கிண்டல் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் கிரீன், கோல்டு அணிகள் பங்கேற்றன. இதில் ஆஸ்திரேலியாவின் சிறந்த வீரர்களான ரிக்கி பாண்டிங் தலைமையில் கோல்டு அணியும், ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையில் கிரீன் அணியும் விளையாடியது. இப்போட்டியில் ரிக்கி பாண்டிங் அணி, வெற்றிபெற்றது.
பாண்டிங் அணிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளராக செயல்பட்டார். அவரை தவிர்த்து இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரர் யுவராஜ் சிங்.
இப்போட்டியில் இவரது பேட்டிங்கை கிறிஸ்கெயில் தனது சமூக வலைதளத்தில் கிண்டல் செய்துள்ளார். மெல்போர்னின் ஜங்சன் ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் விளையாடிய யுவராஜ் சிங் ஆஸ்திரேலிய வேகப்பந்த வீச்சாளர் பிரட்லீயின் பந்து வீச்சை எதிர்கொண்டார். 10 ஓவர்கள் மட்டுமே கொண்ட இப்போட்டியை யுவராஜ் நிதானமாக எதிர்கொண்டார். பிரிட்லீ வீசிய ஒரு ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதைப்பார்த்த கிறிஸ் கெயில், இது டெஸ்ட் போட்டி இல்லை என நக்கலாக போஸ்ட் ஒன்றை வெளியிட்டார்.
Top catch from Alex Blackwell! Yuvraj Singh's gotta go!
Donate to the #BigAppeal here: https://t.co/HgP8Vhnk9s pic.twitter.com/hW8rYmFIwU
— cricket.com.au (@cricketcomau) February 9, 2020
இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், கிறிஸ் கெயில், யுவராஜ் சிங் ஆகியோர் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.