வேகமாக பரவும் 'கொரோனா' வைரஸ்... மர்ம நபரின் 'எதிர்பாராத' செயல்... 'சல்யூட்' அடித்த சீன போலீசார்... 'வைரலாகும் வீடியோ'...
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் காவல்நிலையத்திற்கு வந்த மர்மநபர் ஒருவர் 500 முகமுடிகளை வைத்து விட்டு நன்றி எதிர்பாராமல் சென்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு காவல்நிலையத்தில் பணியாற்றிய காவலர்கள் தெருவில் நின்று சல்யூட் அடித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.
கட்டுவிரியன் பாம்புகளை சூப் வைத்து சாப்பிட்டதால் இந்த வைரஸ் மனிதர்களுக்கும் பரவியது என சீன அரசு தெரிவித்துள்ளது. இந்த வைரசுக்கு சீனாவில் இதுவரை 132 பேர் உயிழந்துள்ளனர். மேலும், 6061 பேர் இந்த வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் சீன அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் சீன மக்கள் பலரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தங்கள் முகங்களில் முகமூடிகளை அணிந்து கொண்டு வெளி இடங்களுக்கு பயணிக்கின்றனர். இதனால் பல்வேறு பகுதிகளில் முகமூடிக்கு மிகுந்த தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்தநிலையில், சீனாவில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு முகமூடி அணிந்து வந்த நபர் ஒருவர் தனது கையில் அட்டைபெட்டியில் மர்மப்பொருளை கொண்டுவந்தார். பின்னர் அதனை காவல்நிலையத்தில் வைத்து விட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றார். இதைக் கண்டு பதற்றமடைந்த போலீசார், அவரிடம் விசாரிப்பதற்கு ஓடி வந்தனர்.
பின்னர் பெட்டிகளில் என்ன உள்ளது என்பதை ஆராய்ந்தனர். அப்போது அந்த பெட்டிகளில் 500 முகமூடிகள் இருப்பதை கண்டு நெகிழ்ச்சியடைந்தனர்.
பின்னர் அந்த மர்ம நபரை பின்தொடர்ந்து சென்ற போலீசார், தெருவில் நின்றபடி அவருக்கு ஒரு சல்யூட் அடித்தனர். பலன் எதிர்பாராமல் அந்த மர்மநபர் செய்த உதவிக்கு போலீசார் நன்றி தெரிவித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
Stranger leaves 500 face masks at police station in China before running away pic.twitter.com/b5buP1aR1P
— RT (@RT_com) January 29, 2020
