'என்னா கட்ஸ்! இவங்களுக்கு வயசாகல!'.. '20 கிலோ மலைப்பாம்பு' ..'அசால்ட்டாக பிடித்து' கொஞ்சியபடி பெண்மணி செய்த காரியம்.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 13, 2019 12:37 PM

கொச்சினில் புகழ்பெற்ற வன உயிரிகளை மீட்கும் அதிகாரி ஒருவர் 20 கிலோ எடையுள்ள மலைப்பாம்பினை மீட்டுள்ள சம்பவம் வீடியோவாக வலம் வருகிறது. 

20 Kg python caught alive by wife of senior Navy officer video

கடந்த 2002லிருந்து இந்த பணியைச் செய்துவரும் இந்த அதிகாரி வித்யா ராஜூவுக்கு தற்போது 60 வயது. ஆனால் இந்த வயதிலும் துணிச்சலுடன் பாம்புகளை பிடித்து வனாந்திரத்தில் கொண்டு சேர்க்கிறார். 

இந்த வீடியோவிலும் அப்படித்தான் 20 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பினை பிடித்துக்கொண்டே இந்த பெண்மணி தனக்கு உதவியாய் இருக்கும் ஊழியர்களுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்திக் கொண்டே, அசால்ட்டாக மலைப்பாம்பினை

பிடித்து அடைக்கிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும், அந்த மலைப்பாம்பினை பச்சா என்று அழைத்து கொஞ்சியபடி அந்த பெண்மணி கையாளுவதை பலரும் பாராட்டியதோடு, அந்த பெண்மணியின் கட்ஸையும் புகழ்ந்துள்ளனர். 

Tags : #KERALA #VIDEOVIRAL