'அக்கா, தங்கை இருவருக்கும்'.. 'ஒரே மேடையில்' வைத்து தாலி கட்டிய..'ஒரே மணமகன்'.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 12, 2019 08:24 PM

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான திலீப் என்கிற தீபு பரிஹாருக்கு 9 வருடத்துக்கு முன்பு திருமணமானது. அவரது மனைவி வினிதாவுக்கு தற்போது 28 வயதாகும் நிலையில், திலீப் வினிதாவின் தங்கை ராஞ்சனாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.

man marries 2 sisters at the same time video viral

திலீப் மற்றும் வினிதா தம்பதியருக்கு 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், உடல் நிலை சரியில்லாத வினிதா, தனது குழந்தைகளை கவனிக்க முடியாமல் சிரமப்படுவதால், வினிதாவின் சம்மதத்துடனேயே வினிதாவின் 22 வயது தங்கையை திருமணம் செய்துகொண்டதாக திலீப் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்த திருமண நிகழ்வில், தனது முதல் தாரமான வினிதாவுக்கும், 2-வது தாரமான வினிதாவின் தங்கை ராஞ்சனாவுக்கும் அதே திருமண மேடையில் ஒரே நேரத்தில் தாலி கட்டினார். பெரியோர்களின் சம்மதத்துடன் நடந்த திருமண இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : #MADHYAPRADESH #WEDDING #VIDEOVIRAL