VIDEO: 'அடி பட்டிருக்குனு சொன்னாங்க... இங்க என்ன ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடக்குது?!'... 'பாண்டியாவும், இஷாந்த் ஷர்மாவும் செம்ம ஜாலி மூட்ல இருப்பாங்க போல'... வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, உடல் பயிற்சி செய்யும் போது பாலிவுட் பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

நியூசிலாந்து தொடரின் போது ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டது. அதனால், அவர் தற்போது ஓய்வெடுத்து வருகிறார். மேலும், ரஞ்சி கோப்பைத் தொடரில் விளையாடிய போது அடிபட்டதால், இஷாந்த் சர்மாவும் ஓய்வில் உள்ளார். ஆனால், உடற்தகுதி தேர்வில் இஷாந்த் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட முடியும் என்று சொல்லப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் இஷாந்த் ஷர்மாவும், ஹர்திக் பாண்டியாவும் அடுத்துவரும் போட்டிகளுக்காக தயாராகி வருகின்றனர். அவர்கள் இருவரும் பயிற்சி செய்யும் போது ஜாலியாக நடனமாடியுள்ளனர். அதை இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் பதிவு செய்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
