"ரா நம்ம BEACH'U பக்கம் பொத்தாம்... ஒரு டப்பாங்குத்து வெஸ்தாம்.." அடேங்கப்பா... இந்த வயசுலயும் என்ன ஒரு எனர்ஜி...! வைரலாகும் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jan 16, 2020 11:06 AM

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் நகராட்சி உழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தூய்மை பணி செய்யும் ஊழியர்களுடன் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ஆடல் பாடலுடன் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

Viral Video of Old Woman Dancing at Pongal Celebrations

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துறைவாரியாக அரசு ஊழியர்களை அழைத்து அவர்களுடன் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். அதே போன்று இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தூய்மைப் பணி செய்யும் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து அவர்களுடன் பொங்கல் பண்டிகையை ஆடல் பாடலுடன் கொண்டாடினார்.

இந்த கொண்டாட்டத்தில் ஒரு வயதான மூதாட்டி ஒருவர், சினிமா பாடலுக்கு நடனமாடும் வீடியோ ஓன்று, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த  வீடியோவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடியும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

Tags : #PONGAL #DANCE #CELEBRATIONS