‘தூங்க வைப்பதாக அழைத்துப் போய்’... ‘தந்தை செய்த கொடூர காரியம்’... ‘5 வயது சிறுமிக்கு நடந்த பயங்கரம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 13, 2019 11:08 AM

ஐந்து மனைவிகளை கொண்ட 50 வயதான கூலித் தொழிலாளி ஒருவர், பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

50 yea old father given sexual abuse to his own daughter

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள, காயிதே மில்லத் பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான ஷான்பாஷா. கூலித்தொழிலாளியான இவருக்கு 5 மனைவிகள், 4 மகன்கள் மற்றும் ஏழு மகள்கள் உள்ளனர். இவரது 3-வது மனைவி மட்டும் அயல்நாட்டில் வேலை செய்துவரும்நிலையில், அவருடைய 5 வயது மகள், அருகில் உள்ள ஷான்பாஷாவின் தங்கை வீட்டில், வளர்ந்து வருவதாக தெரிகிறது.

அந்த சிறுமியை இரவு நேரத்தில் மட்டும், தன்னுடன் படுக்க வைத்துக் கொள்வதாக கூறி, ஷான்பாஷா அழைத்து செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று இரவு, வழக்கம்போல் அழைத்துச் சென்ற ஷான்பாஷா, தான் பெற்ற குழந்தை என்றும் பாராமல், குடிபோதையில் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது. இதனால் காயமடைந்த அந்த சிறுமி, காலையில் தனது அத்தை வீட்டிற்கு சென்றபோது, வலியால் துடித்து அழுதுள்ளாள்.

இதனை அறிந்த அவரது உறவினர்கள், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிறுமியை சேர்த்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், திருப்பத்தூர் நகர காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து ஷான்பாஷாவை பிடித்து விசாரித்தபோது, தான் செய்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதால், அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, ஷான்பாஷாவை கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags : #SEXUALABUSE #DAUGHTER #FATHER