'எல்லாரும் வந்துட்டாங்க'.. 'என் மகன் உயிரோடு இருந்துருந்தா போனாச்சும் பண்ணிருப்பான்'.. கதறிய தந்தை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Sep 10, 2019 06:05 PM
ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட கோபியைச் சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு உடல் நலம் குறைவாக இருக்கும் சூழலில் இவரது இளைய மகன் நாகராஜ் கடந்த செப்டம்பர் மாதம் நம்பியூர் வெள்ளாள பாளையத்தைச் சேர்ந்த சம்பத் என்பவரின் போர்வெல் வண்டியில் வடமாநிலத்துக்கு வேலைக்குச் சென்றார்.
ஆனால் போனதன் பிறகு தந்தை சண்முகத்துக்கு ஒரு நாள் போன் செய்த நாகராஜ், முதலாளி சம்பத் 6 மாதமாக சம்பளத்தை தராமல் இழுத்தடிப்பதாகவும் எப்படியாவது அதை பெற்றுக்கொண்டு ஊருக்கு வருகிறேன் என்றும் பேசியுள்ளார். அப்போது சம்பத்தும் சண்முகத்திடம் அதே போனில் பேசியுள்ளார்.
ஆனால் போர்வெல் வண்டி திரும்பி வந்தபோது நாகராஜ் மட்டும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ந்த சண்முகம், தன் மகன் எங்கே என்று சம்பத்திடம் கேட்க, சம்பத்தோ, நாகராஜ் ரயிலில் வருவதாகக் கூறி 5 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் நாகராஜ் வரவேயில்லை.
இதனால் மனம் உடைந்த சண்முகம் சம்பத்திடம் தன் மகன் எங்கே என்று ஆவேசமாக கேட்டுள்ளார். அப்போது சம்பத் நாகராஜ் காணாமல் போய்விட்டதாகவும், ‘நானும் தேடுறேன். நீங்களும் தேடுங்க.. ஒழுங்கா இல்லனா உன் மகன உயிரோடு பார்க்க முடியாது’ என்று மிரட்டும் தொனியில் பதில் அளித்துள்ளார். இதனால் சண்முகம், 'எல்லாரும் வந்துட்டாங்க'.. 'என் மகன் உயிரோடு இருந்துருந்தா போனாச்சும் பண்ணிருப்பான்'.. என்று கதறியதோடு, தன் மகனுக்கு என்னானது என கண்டுபிடித்து தரச் சொல்லி கண்ணீர் மல்க கலெக்டரிடம் மனுவும் கொடுத்துள்ளார்.