'என்னமா இப்படி செஞ்சுட்ட.. கடைசியில நீ ஜெயிலுக்கு போக நானே காரணமாயிட்டேனே?' உருகிய தந்தை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 15, 2019 08:54 PM

பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஆறுமுகத்துக்கு வித்யா என்ற மகளும் விக்னேஷ் என்கிற மகனும் இருக்கின்றனர். வித்யா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாகவும், விக்னேஷ் சிறுசேரியில் இருக்கும் நிறுவனமொன்றில் ஊழியராகவும் பணியாற்றி வர, நண்பரின் திருமணத்துக்காக திருநள்ளாறு வரை செல்வதாகக் கூறிவிட்டு வித்யா சென்றுள்ளார்.

Daughter jailed with her friend after cheating her

மீண்டும் அங்கிருந்து புறப்பட்டுவிட்டதாகவும், கோயம்பேடு வந்து தன்னை பிக்-அப் செய்துகொள்ளுமாறும் தன் சகோதரர் விக்னேஷிடம் வித்யா கூற, குறித்த நேரத்தில் கோயம்பேடு வந்து, சகோதரி வித்யாவுக்கு விக்னேஷ் போன் செய்தால், போனோ ஸ்விட்ச் ஆஃப் என வந்தது. அதன் பிறகு மர்ம நபர்கள் போன் செய்து 10 லட்சம் கொடுத்தால்தான், வித்யாவை விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

உடனடியாக பதறிபோன வித்யாவின் குடும்பம் போலிஸாரிடம் தகவல் தர, இணை கமிஷனர் விஜயகுமாரி தலைமையில், நடத்தப்பட்ட தீவிர சிசிடிவி ஆய்வு, விசாரணைகளின் பேரில் வித்யா ஒரு இளைஞருடன் புதுச்சேரி செல்லும் பேருந்தில் கிண்டியில் இருந்து ஏறியது தெரியவந்தது. அந்த இளைஞர் வித்யாவின் நண்பர் என அறியப்பட்டதை அடுத்து அவரை ட்ரேஸ் செய்தபோது, இருவரும் கிளம்பி சென்னை கோயம்பேடு வந்தனர். அங்கு சரியாக போலீஸாரிடம் சிக்கினர்.

அப்போதுதான் வித்யா  திடுக்கிடும் உண்மைகளைக் கூறியுள்ளார். அதன்படி, வித்யா காரைக்காலில் படித்துக் கொண்டிருந்தபோது, மனோஜ் என்பவருடன் உண்டான பழக்கத்தையும், அதன் பிறகு கனடா செல்வதற்காக வித்யாவிடம் மனோஜ் பணம் கேட்டதையும் அதற்காக இருவரும் சேர்ந்து அரங்கேற்றிய நாடகமே இந்த கடத்தல் சம்பவம் என வித்யா ஒப்புக்கொண்டார்.

இதனை அடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து மகளிடம் பேசிய தந்தை ஆறுமுகம்,  ‘என்னமா நீ இப்படி செய்து நம் குடும்பத்தை சங்கடப் படுத்துகிறாயே? நீ ஜெயிலுக்கு போக நானே காரணமாயிட்டேனே’ என்று கண்ணீர் மல்கக் கதறியுள்ளார்.

Tags : #DAUGHTER #FATHER #CHEAT #KIDNAP #FRAUDSTER