‘தூங்காமல்’ அடம்பிடித்த ‘8 வயது’ சிறுவனுக்கு நடந்த கொடூரம்... நண்பருடன் சேர்ந்து ‘தந்தை’ செய்த அதிர்ச்சி காரியம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Dec 20, 2019 11:35 AM

மனைவியின் 8 வயது மகனை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Mumbai Father Kills 8 YO Step Son As He Didnt Sleep On Time

நவி மும்பையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் அவருடைய மனைவி மற்றும் மனைவிக்கு முதல் திருமணம் மூலமாக பிறந்த மகன் சூரஜ் (8) ஆகியோருடன் வசித்துவந்துள்ளார். சம்பவத்தன்று இரவு அவர் மனைவி மற்றும் மகனுடன் பன்வெல் நகரின் சாலையோரம் தூங்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது சிறுவன் சூரஜ் நீண்ட நேரமாகியும் தூங்காமல் இருந்துள்ளார்.  அதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் சிறுவனுடைய கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.  பின்னர் தன் நண்பர் ஒருவருடைய உதவியுடன் சிறுவனுடைய உடலை சாக்குமூட்டையில் கட்டி அப்புறப்படுத்தியுள்ளார்.

பின்னர் போலீசாரால் பிடிக்கப்பட்டபோது அவர், “சிறுவன் தூங்க மறுத்ததாலேயே ஆத்திரத்தில் கொலை செய்தேன்” எனக் கூறியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ரமேஷ் மற்றும் அவருக்கு உதவிய நண்பர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் விசாரணையின்போது ரமேஷ் கூறியதுதான் கொலைக்கான உண்மையான காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.

Tags : #CRIME #MURDER #HUSBAND #WIFE #SON #SLEEP