'தெரியாம கட்டிப்பிடிச்சுட்டேன்!'.. 'கடைசியில'.. வைரலாகும் பெண்ணின் 'ரியாக்‌ஷன்' .. வீடியோ!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Siva Sankar | Dec 11, 2019 12:28 PM

அமெரிக்காவைச் சேர்ந்த மேரி கேத்ரின் பேக் ஸ்டோர்ம் தவறுதலாக செய்துவிட்ட வெகுளியான காரியத்தை தனக்கே உரிய பாணியில் தனது சமூக ஊடகக் கணக்கில் வீடியோவாக பேசி வெளியிட்டுள்ளார்.

woman hugs a stranger by mistake, shares in a hilarious way

தான் செய்த தவறினை வெட்கத்துடனும், நளினத்துடனும் கிரேஸியாக அவர் சொல்லும் விதத்துக்காகவே இந்த வீடியோவை பலரும் பார்த்து பகிர்ந்துள்ளனர். கிறித்துமஸ் கொண்டாட்டத்தில் இருந்த மேரி கேத்ரின், ஒரு இடத்துக்கு சென்றுவிட்டு வெளியில் வந்துள்ளார்.

அப்போது ஒருவர் தனது காரின் ஜன்னலை சுத்தம் செய்துகொண்டிருந்ததைப் பார்த்த மேரி கேத்ரின், அடடா கிறித்துமஸ் நேரத்தில் எல்லாரும் அன்பைப் பொழிகிறார்களே? என்று நினைத்துக் கொண்டு, காரை துடைத்துக் கொண்டிருந்தவரை ஓடிச்சென்று நன்றியுடன் கட்டிப்பிடித்து வாழ்த்து சொல்லியிருக்கிறார் கேத்ரின்.

உடனே அந்த நபர், கோபமாகி முறைத்துள்ளார். அப்போதுதான்,

அது தனது கார் அல்ல, அந்த நபர் அவரது சொந்த காரை சுத்தம் செய்துகொண்டிருந்துள்ளார் என்பது கேத்ரினுக்கு புரிய வந்தது. இதனால் மொக்கை வாங்கிய கேத்ரின், தனது முட்டாள்தனத்தைத்தான், சிரிக்கவும் முடியாமல், அழவும் முடியாமல் வீடியோ வாயிலாக பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை 31 மில்லியன் பேர் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #VIDEOVIRAL