VIDEO: அன்னைக்கு 'அழ' வச்சதுக்கு... இன்னைக்கு தாவிப்புடிச்சு 'பழிதீர்த்துக்' கொண்ட ஹிட்மேன்... செம வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்று நடந்த முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பழிதீர்த்துக் கொண்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் போட்டிக்கு முன் அளித்த பேட்டியில் நியூசிலாந்து போன்ற ஒரு நல்ல அணியை பழிவாங்க விரும்பவில்லை என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்து இருந்தார்.

Smart and good catch by Rohit Sharma.#NZvsIND #INDvsNZ #RohitSharma pic.twitter.com/hPuKIV38hr
— Awarapan 🇮🇳 (@KingSlayer_05) January 24, 2020
எனினும் அந்த அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் உலகக்கோப்பை கனவை தகர்த்த மார்ட்டின் குப்திலை, இன்று இந்திய அணியின் ஹிட்மேன் என புகழப்படும் ரோஹித் சர்மா கடினமான கேட்ச் ஒன்றை பிடித்து வெளியேற்றினார். குப்தில் அடித்த பந்து சரியாக பவுண்டரி லைனை தாண்டி செல்லவிருந்த நிலையில் எகிறிக்குதித்து அதைப்பிடித்த ரோஹித் பந்தை உள்ளே தூக்கிப்போட்டு மீண்டும் வந்து பிடித்து, குப்திலை அவுட் ஆக்கினார்.
You beauti @ImRo45 😘😘😘😘😘 .. #RohitSharma #NZvIND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 pic.twitter.com/d4A2PDNjCp
— Jitendra Jain (@iam_Jitu) January 24, 2020
உலகக்கோப்பையில் இருந்து இந்தியா வெளியேறியபோது தோனி, ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் கண்கலங்கி அழுதனர். தோனி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட அந்த 2 இஞ்ச் இடைவெளியை கீழே விழுந்து கடந்திருக்க வேண்டும் என வருத்தத்துடன் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
