'ஏன் இப்படி?'.. கடுப்பேற்றிய ரசிகர்கள்.. மைதானத்தில் கோலியை உச்சகட்ட டென்ஷனாக்கிய இன்னொரு சம்பவம்! வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Dec 09, 2019 01:46 PM

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டி20 போட்டி திருவனந்தபுரம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் இந்தியாவின் ஃபீல்டிங் மோசமாக இருந்ததாக ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

Virat Kohli reaction to Trivandrum crowd, 2nd T20 INDvsWI video

ஒரே ஓவரில் 2 கேட்சுகளை இந்திய அணி தவறவிட்டதே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஒரு பெரும் வாய்ப்பாக அமைந்ததாக ரசிகர்கள் குறிப்பிடும் நிலையில், புவனேஸ்வர் குமார் வீசிய ஐந்தாவது ஓவரில் லீவிஸ் கொடுத்த கேட்ச்சினை ரிஷப் நழுவ விட, ரசிகர்களோ தோனி கட்-அவுட்டுடன் அமர்ந்திருந்ததோடு, ரிஷப்பை நோக்கி தோனி, தோனி என கத்தத் தொடங்கிவிட்டனர். இதேபோல், இந்த போட்டியில் இடம் பெறுவார் என கேரள ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட வீரர் சஞ்சு சாம்சன் இடம் பெறாததால், அவர் பெயரையும் சொல்லி ரசிகர்கள் கூச்சலிட்டனர்.

அப்போது பவுண்டரி எல்லை அருகே நின்றுகொண்டிருந்த கோலி, ரசிகர்களைப் பார்த்ததும், அவரது முகம் கலவரமானது. ரசிகர்களை நோக்கி கையசைத்து தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியனார்.

இதேபோன்று முதல் டி20 போட்டியிலும் ஒரு சம்பவம் நடந்தபோது, ரிஷப் பண்ட்டை நோக்கி ரசிகர்கள் தோனி பெயரைச் சொல்லி கத்தினர்.  அப்போது பேசிய கோலி, ‘ரிஷப்பின் திறமையை நிரூபிப்பதற்கு தேவையான கூடுதல் இருப்பை அவருக்கு வழங்க வேண்டும், மைதானத்தில் தோனி பெயரை எழுப்பி இளம் வீரரைக் கிண்டல் செய்வது மரியாதையானதாக இல்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.

 

Tags : #VIRATKOHLI #VIDEOVIRAL #INDVSWI #RISHABHPANT