'அடுத்தநாள் கல்யாணத்த வெச்சுகிட்டு.. மாப்ள செய்ற வேலையா இது?'...'சிசிடிவியில் சிக்கிய பின்'.. 'மணமகள்' செய்த காரியம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Oct 08, 2019 06:52 PM

திருமணத்துக்கு இன்னும் ஒருநாளே இருக்கும் சூழலில், தான் வசிக்கும் ஹவுஸ்டன் பகுதியில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் இருக்கும் டெக்ஸாசுக்கு உட்பட்ட க்ரூவ்டனில் உள்ள வங்கியில் கொள்ளையடிக்கச் சென்ற ஹீத் பம்பஸ் சிக்கிக்கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

groom robbed bank to buy ring on the day before wedding

குறிப்பாக இந்த கொள்ளை முயற்சி நடந்தது எதற்காக என்பதுதான் இருப்பதிலேயே இன்னும் ஆச்சரியமான விஷயம். ஆம், அடுத்த நாள் கல்யாணத்தை வைத்திருந்த ஹீத் பம்பஸுக்கு தனது மனைவியாகப் போகிற மணமகளின் கைகளில் அணிவதற்கு திருமண மோதிரம் வாங்கக் கூட பணம் இல்லாத சூழலாம்.

இதனால் பம்பஸ் ஒரு முடிவு எடுத்தார். கைகளில் ஆயுதத்துடன் வங்கிக்கு சென்று மிரட்டி எண்ணிலடங்காத பணத்தை எடுத்துக்கொண்டுச் சென்றுள்ளார். போகும் வழியில் சிசிடிவியில் சிக்கிக் கொண்டதோடு, தனது ஆடை ஒன்றையும் அங்கு விட்டுவிட்டுச் சென்றுள்ளார்.

அதன் பிறகு சிசிடிவி புகைப்படத்தை வெளியிட்டு காவல்துறை விளம்பரப்படுத்தியதைப் பார்த்த மணப்பெண், மணமகன் பம்பஸிடம் பேசி சரணடைவதற்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளார். அதன் பிறகு அவரிடம் பணத்தைப் பெற்றுக்கொண்ட நீதித்துறை, அவருக்கு அபராதத் தண்டனையை அளித்துள்ளது.

திருமண மோதிரத்துக்காக திருடியவரை, மணமகளே திருத்தி, போலீஸாரிடம் சரணடைய வைத்துள்ள சம்பவம் பலரிடையே கவனத்தை உண்டாக்கியுள்ளது.

Tags : #ROBBERY #GROOM #BRIDE #MARRIAGE #WEDDING #RING #VIRA #BIZARRE