ஓடும் ரயிலில் ஜன்னல் வழியே தவறி விழுந்த குழந்தை..! நெல்லை அருகே பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 10, 2019 01:18 PM

நெல்லை அருகே ஓடும் ரயிலில் இருந்து ஜன்னல் வழியாக குழந்தை தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Girl slipped out the window on the running train near Tirunelveli

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சமாதனபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பேட்ரிசன். இவருடைய மகள் ஸ்மைலின் (6). இவர் குடும்பத்துடன் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் இருந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லைக்கு வந்துகொண்டு இருந்துள்ளார். ரயில் வள்ளியூரை கடந்து செங்குளம் அருகே வந்தப்போது சிறுமி ஸ்மைலின் அவசர வழி ஜன்னல் அருகே விளையாடிக்கொண்டு இருந்துள்ளாள். அப்போது எதிர்பாராதவிதமாக ஜன்னலில் இருந்து சிறுமி கீழே விழுந்துள்ளாள்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ரயில் அபாய சங்கிலியை இழுத்து பிடித்து ரயிலை நிறுத்தியுள்ளனர். பின்னர் வேகமாக சிறுமி விழுந்த இடத்துக்கு சென்றுள்ளனர். அங்கு சிறுமியின் கையில் காயங்களுடன் அழுதுகொண்டு இருந்துள்ளாள். உடனே குழந்தை தூக்கிகொண்டு ரயில் நிலையத்துக்கு சென்றுள்ளனர். அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிறுமியின் காயத்துக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ரயில் சற்று மெதுவாக சென்றதால் சிறு காயஙகளுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #TIRUNELVELI #TRAIN #TAMILNADU #BABY #RUNNINGTRAIN #ANANTAPURI EXPRESS