நாலு நாட்கள் 'பிணத்துடன்' சுற்றித்திரிந்த நபர்... கடைசியில் செய்த 'விபரீத' வேலை... பொறிவைத்து 'பிடித்த' போலீஸ்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Mar 11, 2020 02:42 PM

கார் மோதி இறந்த பெரியவரின் உடலுடன் இளைஞர் ஒருவர் நான்கு நாட்களாக சுற்றித்திரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Youth killed 67 year old man in Karnataka, Police investigate

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் பன்னியங்கரை என்னும் பகுதியை சேர்ந்த தேசிய நெடுஞ்சாலையில் முதியவர் ஒருவரின் உடல் காயங்களுடன் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது கர்நாடக எண் கொண்ட கார் ஒன்று அப்பகுதியில் சுற்றித்திரிந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த காரின் பதிவெண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர் இதில் அந்த காரானது கர்நாடக மாநிலம் ஹானக்கல் பகுதியை சேர்ந்த சங்கமித்ர(37) என்பவருக்கு சொந்தமானது என்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

கர்நாடக மாநிலம் தேவனஹள்ளி அருகேயுள்ள நாயிக்கன்ஹள்ளியை சேர்ந்தவர் வெங்கடேசப்பா(67) இவர் கடந்த  4-ம் தேதி நடந்து சென்று கொண்டிருந்த போது சங்கமித்ர கார் மோதி காயமடைந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அவரின் காரிலேயே வெங்கடேசப்பாவை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே வெங்கடேசப்பா இறந்து விட்டார்.

அதிர்ச்சி அடைந்த சங்கமித்ரா போலீசில் சிக்காமல் இருக்க உடலை அவரது உறவினர்களிடம் தராமல் காரில் வைத்துக் கொண்டு 4 நாட்களாக ஊர் ஊராக சுற்றியுள்ளார். கடைசியாக கடந்த 8-ந்தேதி கார் விபத்து நடந்த இடத்திலிந்து 600 கி.மீ தொலைவில் உள்ள கேரள மாநிலம் வடக்கஞ்சேரி அருகே வெங்கடேசப்பாவின் உடலை வீசி சென்றுள்ளார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். தற்போது சங்கமித்ரவை கைது செய்து ஆலத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.