'என்ன நடந்தாலும், எப்போது நடந்தாலும்... 'இது' மட்டும் மாறாது... ஆனால்'... கொரோனாவுக்கு சவால் விடும் தேவசம் போர்டு!... சபரிமலை பக்தர்கள் அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூறி உள்ளது.

கேரளாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முதல் கட்டமாக, மாநிலம் முழுவதும் 7-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவர்களுக்கான பொதுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோல கேரளாவில் பொது விழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில்கள், ஆலயங்கள், மசூதிகளில் அதிகளவில் மக்கள் திரள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 13-ந்தேதி மாதாந்திர பூஜைக்காக திறக்கப்படும். 18-ந்தேதி வரை வழிபாடுகள் வழக்கம்போல் நடக்கும். ஆனால், இதில் பக்தர்கள் பங்கேற்க வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூறி உள்ளது. கோவிலில் அப்பம், அரவணை விற்பனையும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.
