'நேசமணி ட்ரெண்ட் ஆனப்போ வந்த ஐடியா'.. ஒட்டகப்பால் பிரியர்களின் ஆதங்கத்தை தீர்த்த உடுமலை இளைஞர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Nov 06, 2019 04:34 PM
வெற்றிக்கொடிகட்டு படத்தில் ஒட்டகப்பால் கேட்டு வடிவேலு தகராறு செய்துகொண்டிருப்பார். ஆனால் அவரைப் போன்று ஒட்டகப்பால் குடிக்க விரும்புபவர்களின் விருப்பத்தை புரிந்து உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த ஆம்ரோஸ் ஸ்டீபன் என்கிற இளைஞர் ஏ.வி.எம் சிப்ஸ் & கஃபே எனும் கடையில் ஒட்டகப்பால் விநியோகித்து வருகிறார்.

வடிவேலுவின் நேசமணி ட்ரெண்டிங்கின்போது துபாயில் இருந்த ஆம்ரோஸ் ஸ்டீபனுக்கு ஒட்டகப்பால் பற்றிய யோசனை வந்துள்ளது. அதனை வாங்கி பதப்படுத்தி வீட்டுக்கு கொண்டுவந்து டீ போட்டி குடித்தபடி அனைவருக்கும் அதன் சுவை பிடித்துப் போகவே, ஒட்டகப்பால் பொடியை தண்ணீரில் கலந்து, உடுமலைப்பேட்டையில் உள்ள தனது கடையில் ஒட்டகப் பால் தயாரித்துக் கொடுக்கத் தொடங்கினார்.
ஒட்டகப் பாலை சூடுபடுத்தினால் அதன் சத்து குறைந்துவிடும் என்பதால், இவ்வாறு செய்வதாகக் கூறிய அம்ரோஸ், புதிய தொழில் நுகர்பொருளுக்கான சந்தை விரியும்போது அதற்கேற்றார்போல் மாறிக்கொள்ள நினைத்தே இதைச் செய்ததாகவு குறிப்பிடுகிறார். மேலும் ஒட்டகப்பாலை 70 ரூபாய்க்கு விற்றாலும், பலரும் அதன் காரணத்தை புரிந்துகொண்டு விரும்பி வாங்கிச் செல்வதாக விகடனுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
