இந்த 'வீடியோ'லாம் பாக்குறதுல.. இந்தியர்கள் தான் 'பர்ஸ்ட்டாம்'.. இலவசம்னா 'ஒடனே' பாக்குறாங்களாம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Nov 05, 2019 07:44 PM

ஆன்லைன் வீடியோக்களை பார்ப்பதில் இந்தியர்கள் முதலிடம் வகிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Indians spend more time to watching online video, survey

சமீபத்தில் லைம் லைட் நெட்வொர்க்ஸ் என்னும் நிறுவனம் State of Online Video 2019 என்னும் பெயரில் நடத்திய ஆய்வில் இந்தியர்கள் ஆன்லைன் வீடியோ பார்ப்பதில் முதலிடம் வகிப்பது தெரிய வந்துள்ளது.

இந்தியர்கள் சராசரியாக வாரத்துக்கு 8 மணிநேரம் 33 நிமிடங்கள் ஆன்லைன் வீடியோவுக்காக செலவு செய்கின்றனராம். இது சர்வதேச அளவில் சராசரியான 6 மணிநேரம் 48 நிமிடங்கள் என்ற அளவைவிட 1 மணிநேரம் 45 நிமிடங்கள் அதிகமாகும். இதன்மூலம் ஆன்லைனில் வீடியோ பார்ப்பதில் உலக மக்களின் சராசரியை இந்தியர்கள் முறியடித்திருக்கின்றனர்.

ஆன்லைன் கன்டன்ட் இலவசமாக வழங்கப்பட்டால் 84.8% இந்தியர்கள் அதனை உடனே பார்க்கின்றனர். இதுபோன்ற ஆன்லைன் வீடியோக்களை வீடு, பயணம் செல்லும் இடங்களில் இந்தியர்கள் அதிகம் பார்ப்பதாக கூறப்படுகிறது. இதற்கு அதிகமாக மொபைலை தான் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனராம். அதேபோல பிரபல டிவி ஷோக்கள், செய்திகள், படங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்காக உருவாக்கப்படும் வீடியோ ஆகியவை தான் இந்தியர்களின் பேவரைட் சாய்ஸாக இருக்கிறதாம்.

Tags : #SMARTPHONE