'கையில் சிக்கிய சகோதரியின் கணவன்'...'உருட்டுக்கட்டையால் புரட்டி எடுத்த பெண்'...சென்னையில் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Dec 04, 2019 03:23 PM

சென்னை புரசைவாக்கம் பகுதியில் பெண் ஒருவர் தனது சகோதரியின் கணவனை உருட்டுக்கட்டையால் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai : Woman Attacks Sister\'s Husband, Video Goes Viral

புரசைவாக்கம் டவுட்டன் பாலத்தின் கீழ் சிவா, இந்து தம்பதியர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகிறார்கள். சிவாவிற்கு குடிப்பழக்கம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவ்வப்போது குடித்துவிட்டு வரும் அவர், மனைவி இந்துவிடம் அவ்வப்போது சண்டையில் ஈடுபடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி தலைக்கேறிய போதையுடன் வந்த சிவா, மனைவி இந்துவை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இந்துவின் சகோதரி சங்கீதா உருட்டுக்கட்டையால் சிவாவை கடுமையாக தாக்கினார். இதையடுத்து உருட்டுக்கட்டையால் தாக்கிய சங்கீதாவை உறவினர்கள் சமாதானம் செய்தார்கள். அவ்வப்போது தகராறில் ஈடுபடும் சிவா இதுபோன்று தர்ம அடி வாங்குவது வழக்கம் என அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.

Tags : #ATTACKED #CHENNAI #WOMAN