‘மாப்பிள்ளை வீட்டார்’ பார்த்துச் சென்றபின்.. இளம்பெண் எடுத்த ‘விபரீத முடிவு’.. இறப்பதற்கு முன் கொடுத்த ‘அதிர்ச்சி வாக்குமூலம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Dec 04, 2019 08:42 PM

புதுச்சேரியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் இறப்பதற்கு முன்பாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

Pondicherry Woman Sets Herself On Fire After Spiked And Raped

புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சின்னக்கடை பகுதியில் உள்ள ஃபோட்டோ கடை ஒன்றில் உதவியாளராக வேலை செய்துவந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தப் பெண்ணை மாப்பிள்ளை வீட்டார் சிலர் திருமணத்திற்காக பெண் பார்த்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு சோகத்துடனேயே காணப்பட்ட அவர் செவ்வாய்க்கிழமை அன்று வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதையடுத்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தப் பெண் உயிரிழப்பதற்கு முன்பாக போலீஸரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

போலீஸாரிடம் அந்தப் பெண் அளித்த வாக்குமூலத்தில், தனது மரணத்திற்கு தான் வேலை செய்துவந்த ஃபோட்டோ கடை உரிமையாளர் மதுரை தான் காரணம் எனவும், அவர் தனக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் தன்னை மிரட்டி அவர் பலமுறை தவறாக நடந்துகொண்டதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தலைமறைவாகியுள்ள மதுரையைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மன அழுத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours), State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) போன்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

Tags : #CRIME #PONDICHERRY #WOMAN #FIRE #SUICIDE #RAPE