‘கொசுவை’ விரட்ட புகைமூட்டம் போட்டதில் .. ‘கண் இமைக்கும் நேரத்தில்’ நடந்து முடிந்த பயங்கரம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Dec 10, 2019 10:52 AM

கொசுவை விரட்ட புகைமூட்டம் போட்டதில் கொட்டகை தீப்பிடித்து எரிந்து மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இதில் கொட்டகையில் கட்டப்பட்டிருந்த 15 ஆடுகளும் உயிரிழந்துள்ளன.

Nagai Woman And Her 15 Goats Died in Fire Accident

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அண்டர்காடு வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சம்மாள் (78). இவர் நேற்று மாலை வீட்டருகே உள்ள கொட்டகையில் தான் வளர்த்துவந்த ஆடுகளைக் கட்டிவிட்டு, கொசுவை விரட்ட புகைமூட்டம் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக புகைமூட்டத்திலிருந்து ஆட்டுக்கொட்டகை முழுவதும்  தீ பரவியுள்ளது.

இந்த பயங்கர தீ விபத்தில் கொட்டகைக்குள் இருந்த மூதாட்டி அஞ்சம்மாள் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்துள்ளார். மேலும் இதில் கொட்டகையில் கட்டப்பட்டிருந்த 15 ஆடுகளும் தீயில் கருகி உயிரிழந்துள்ளன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்துள்ளனர். விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #FIREACCIDENT #WOMAN #GOAT #MOSQUITO #NAGAI