‘உயிருடன் எரிக்கப்பட்ட’ உன்னாவ் பெண்.. ‘கடைசியாக’ கேட்ட ஒன்று.. ‘கலங்க வைக்கும்’ சம்பவம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Dec 07, 2019 08:56 PM

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட உன்னாவ் பெண் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Unnao Rape Victims Last Words Save Me I Want To See Them Die

தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள் உத்தரப்பிரதேசம் உன்னாவ் பகுதியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. 90 சதவிகித காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து தெலுங்கானாவைப் போலவே உன்னாவ் பெண் வழக்கின் குற்றவாளிகளுக்கும் அதே தண்டனை வழங்கப்பட வேண்டும் என குரல்கள் எழுந்து வருகின்றன.

இதுகுறித்துப் பேசியுள்ள அந்தப் பெண்ணின் தந்தை, “அரசாங்கத்திடமும், அதிகாரிகளிடமும் நாங்கள் கேட்பது ஒன்றுதான். எனது மகளை சீரழித்த குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் அல்லது ஹைதராபாத்தில் நடந்ததைப் போல சுட்டுக் கொல்ல வேண்டும். இதைத்தவிர அரசிடமிருந்து வேறெந்த உதவியும் வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் கடைசி நிமிடங்கள் குறித்துப் பேசியுள்ள அவருடைய சகோதரர், “அவளை சீரழித்தவர்கள் அவளுடைய கண்முன்னே இறந்துபோக வேண்டும் என்றே அவள் விரும்பினாள். அதற்காகத்தான் அவள், என்னைக் காப்பாற்றுங்கள். நான் உயிருடன் இருக்க வேண்டும். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என கதறித் துடித்தாள். நான் அவளை நிச்சயமாகக் காப்பற்றுவேன் எனக் கூறியிருந்தேன். ஆனால் அவளைக் காப்பாற்றத் தவறிவிட்டேன்” எனக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

Tags : #UTTARPRADESH #UNNAO #WOMAN #RAPE #MURDER