ஆர்டரே பண்ணாம வீடு தேடி வந்த டெலிவரி.. வெளிய போய் வாங்குன பெண்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Feb 04, 2023 09:49 AM

அவ்வப்போது இணையத்தில் நாம் நேரத்தை உலவிடும் போது நம்மைச் சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள் குறித்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

Woman surprise delivery with her son video viral

அதே போல, நாளுக்கு நாள் ஏராளமான வீடியோக்கள் மற்றும் செய்திகள் உள்ளிட்டவை நெட்டிசன்கள் மத்தியில் பெரிய அளவில் வைரல் ஆகவும் செய்யும். இயல்பாக நடக்கும் விஷயத்தில் இருந்து சற்று மாறுபட்டு மனதை நெகிழ வைக்கக் கூடிய வகையிலோ, அல்லது விநோதமாகவோ அதிர்ச்சி நிறைந்தோ இருக்கும் விஷயங்கள் இப்படி வைரல் ஆகும்.

இந்த நிலையில், மிகவும் வித்தியாசமாக அதே வேளையில் மனதை நெகிழ வைக்கக் கூடிய வகையிலான வீடியோ ஒன்று தான் நெட்டிசன்கள் பலரையும் மனம் குளிர வைத்து வருகிறது.

அங்கித் என்ற நபர் ஒருவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ஜெர்மனியில் வசித்து வரும் அவர், சமீபத்தில் தாய் மற்றும் தந்தை ஆகியோரை காண இந்தியாவிற்கும் வந்துள்ளார். அதுவும் அவர்களிடம் சொல்லாமல் மிகவும் சர்ப்ரைஸாக வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஒரு டெலிவரி ஊழியர் போல வரும் அங்கித், மாஸ்க் மற்றும் தொப்பியையும் அணிந்துள்ளார்.

Woman surprise delivery with her son video viral

மேலும் தனது வீட்டிற்கு வெளியே நின்ற படி, நீங்கள் ஆர்டர் செய்த சமோசா என கூற, அவரது தாய் அங்கித்தின் சகோதரரிடம் போனில் பேசிக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. முதலில், தான் ஏதும் ஆர்டர் செய்யவில்லை என அங்கித்தின் தாய் உள்ளே நின்றபடி கூற, மறுபுறம் போனில் இருக்கும் அங்கித்தின் சகோதரர், அவர் தான் தாய்க்காக ஆர்டர் செய்ததாகவும் தெரிவிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, வெளியே நீண்ட நேரமாக டெலிவரி பாய் போல காவல் நிற்கும் மகனை அவர் தான் என அறியாமலே சென்று சமோசாவை வாங்க செல்கிறார் தாயார். அந்த சமயத்தில், தொப்பி மற்றும் மாஸ்க் இருந்ததால் முதலில் மகன் தான் என்பதை அவர் உணராமல் இருக்க, ஒரு சில நொடியில் மகன் தான் என்பதையும் உணர்ந்து கொள்கிறார்.

Woman surprise delivery with her son video viral

ஜெர்மனியில் இருந்த மகனை இந்தியாவில் பார்த்ததும் ஒரு நிமிடம் வாயடைத்து போகும் தாய், கொஞ்ச நேரத்தில் கட்டியணைக்கவும் செய்கிறார். அங்கித்தின் தந்தையும் கூட ஒரு நிமிடம் குழப்பத்தில் தான் உறைந்து போயிருப்பார். இது தொடர்பான வீடியோ தற்போது எமோஷனல் ஆகவும் பலரை உணர வைத்துள்ளது.

Tags : #VIRAL #MOTHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman surprise delivery with her son video viral | India News.