"பொண்டாட்டிகிட்ட அடி வேணுமா அடி இருக்கு".. இணையத்தை கலக்கும் திருமண பேனர்.. "ஆர்டிஸ்ட்னு நிரூபிச்சிட்டாங்கப்பா?" 😅

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Jan 29, 2023 10:42 AM

இன்றைய காலகட்டத்தில் திருமணத்தை சுற்றி நடக்கும் பல்வேறு விஷயங்கள், பெரிய அளவில் இணையத்தில் கவனம் பெறுவதை நாம் பார்த்திருப்போம்.

New Wedding Banner with dil raju dialogue version viral

அதிலும் குறிப்பாக திருமண நிகழ்ச்சிக்கு முன்பாக அது தொடர்பாக செய்யும் ஏற்பாடுகளில் ஒவ்வொரு விஷயத்தையும் புதுமையாகவும் பலரும் செய்ய நினைக்கின்றனர்.

உதாரணத்திற்கு திருமண அழைப்பிதழ்களை வித்தியாசமாக விமான டிக்கெட் போன்றும், ஆதார் கார்டு போன்றும் என வழக்கம் போல இருக்கும் டிசைன்களை மாற்றி வைத்துவிட்டு புதுமையாகவும் யோசித்து வடிவமைக்கின்றனர். இதே போல திருமண ஃபோட்டோ ஷூட்களையும் சற்று வித்தியாசமாகவும் ட்ரெண்ட் ஆகும் வகையில் செய்வதால் பலரது கவனத்தையும் பெறுகிறது.

இப்படி திருமணத்தை சுற்றி ட்ரெண்டாகும் விஷயங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். அதிலும் சமீப காலமாக திருமண பேனர்கள் குறித்த புகைப்படங்கள் பெரிய அளவில் பலரது கவனத்தையும் பெறுவதையும் நாம் அதிகம் கவனித்திருப்போம். திருமணத்திற்காக மணமக்களின் நண்பர்கள் சேர்ந்து சில வாசகங்களையும் வேடிக்கையாக குறிப்பிட்டு அதனை பொதுமக்கள் முன்னிலையில் பேனர் ஆகவும் வைக்கின்றனர்.

அந்த வகையிலான ஒரு திருமண பேனர் குறித்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் பலரையும் சிரிக்க வைத்து வருகிறது. சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டின் போது, மேடையில் பேசி இருந்த தில் ராஜூ, "டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, ஃபைட்டு வேணுமா ஃபைட்டு இருக்கு" என வாரிசு படம் குறித்து பேசி இருப்பார். இது பின்னர் மீம்ஸாக கூட மாறி இருந்தது. இது தொடர்பான விஷயங்களை தில்ராஜு கூட கவனித்திருந்தார்.

New Wedding Banner with dil raju dialogue version viral

அப்படி இருக்கையில் தில்ராஜு பேசியது போன்று இளைஞர் ஒருவரின் திருமணத்திற்கு அவரது நண்பர்கள் சேர்ந்து சில வசனங்களை குறிப்பிட்டு பேனர் ஒன்றை வைத்துள்ளனர்.

அதில் இடது புறம் மணமக்களின் புகைப்படங்கள் இருக்க, வலது புறம் நண்பர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு கீழே தில்ராஜு புகைப்படத்துடன் அதன் கீழ், "இனிமே பொண்டாட்டி கிட்ட அடி வேணுமா, அடி இருக்கு. தலையில கொட்டு வேணுமா கொட்டு இருக்கு. வயத்துல குத்து வேணுமா, குத்து இருக்கு. மிதி வேணுமா அதுவும் இருக்கு. மொத்தத்துல உனக்கு ஆப்பு இருக்குஊ. ஹாப்பி மேரேஜ் லைப் நண்பா" என தில்ராஜ் வசனத்தையே திருமணத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளனர்.

New Wedding Banner with dil raju dialogue version viral

இதுகுறித்த பேனர்களின் புகைப்படங்கள், தற்போது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

Tags : #MARRIAGE #BANNER #VIRAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. New Wedding Banner with dil raju dialogue version viral | Tamil Nadu News.