13 வருஷமா வீட்டுல இருந்த சோஃபா.. எதார்த்தமா பிரிச்சி பார்த்த பெண்.. ஒரு நிமிஷம் அரண்டு போய்ட்டாங்க..!
முகப்பு > செய்திகள் > உலகம்பெண் ஒருவர் தனது வீட்டில் கடந்த 13 வருடங்களாக உபயோகித்து வந்த சோஃபாவை பிரித்ததாகவும் அதற்கு உள்ளே காணாமல்போன பல பொருட்களை கண்டுபிடித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Image Credit : TikTok/@kacieandco
Also Read | "ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு..".. தென்காசி பரபரப்பு சம்பவத்தில் புதிய வீடியோ வெளியிட்ட குஜராத் பெண்.!
இணைய பயன்பாட்டின் வீச்சு அதிகரித்தன் பலனாக சமூக வலை தளங்கள் மக்களிடையே அறிமுகம் ஆகின. பொதுமக்கள் நொடி நேரத்தில் உலகம் முழுவதும் நடைபெறும் விஷயங்களை தெரிந்துகொள்ளவும், தங்களது செய்தியை உலகிற்கு அறிவிக்கவும் சமூக வலை தளங்கள் பெரும் உதவியாக இருக்கின்றன. அதேபோல, வித்தியாசமான முறையில் வீடியோக்களை, பதிவுகளை பதிவிடும் நபர்கள் சோசியல் மீடியாவில் பிரபலங்களாக வலம் வருவதும் உண்டு.
எளிமையான விஷயங்களையும் சுவாரஸ்யமாக மாற்றும் இவர்களது முயற்சிக்கு நெட்டிசன்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. அப்படியானவர்களில் ஒருவர் தான் கேஸி. சொந்த தொழில் ஒன்றை நடத்திவரும் இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். டிக்டாக் பக்கத்தில் ஆக்டிவாக இயங்கிவரும் இவர் சமீபத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் வீட்டில் தனது குழந்தைகளுடன் அமர்ந்து கேசி டிவி பார்த்துக்கொண்டிருக்கிறார்.
Image Credit : TikTok/@kacieandco
அப்போது சேனலை மாற்ற நினைத்த அவர் டிவி ரிமோட்டை தேடிய போது வீட்டில் இருந்த தங்களது சோஃபாவிற்குள் தேட முடிவெடுத்ததாக கூறியுள்ளார் கேசி. இதனை தொடர்ந்து சோஃபாவின் ஒரு பகுதியை இழுக்க, உள்ளே இருந்து பொருட்கள் கீழே விழுந்திருக்கின்றன. அப்போது கேசி அதிர்ச்சியடைய குழந்தைகள், ஆர்வத்துடன் அதனை பார்த்திருக்கின்றனர். தொடர்ந்து அவர் சோஃபாவை பிரிக்க உள்ளே பழைய விளையாட்டு பொம்மைகள், பழைய உடைகள் என பல பொருட்கள் தனக்கு கிடைத்ததாக கேசி தெரிவித்திருக்கிறார்.
Image Credit : TikTok/@kacieandco
இதுகுறித்து பேசியுள்ள கேசி ரிமோட்டை தேடும்போது 13 வருடமாக வீட்டில் காணாமல் போன பொருட்களை கண்டறிய முடிந்ததாக தெரிவித்திருக்கிறார். இதற்கு காரணம் நிச்சயமாக குழந்தைகளாகத்தான் இருக்கும் என நெட்டிசன்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், ஒருவர் 13 ஆண்டுகளாக சோஃபாவை எப்படி பய்னபடுத்தினீர்கள்? எனவும் மற்றொருவர் இறுதியில் ரிமோட் கிடைத்துவிட்டதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Also Read | "நிலாவுல மாட்டிக்கிட்டேன்.. 100க்கு போன் பண்ண முடியல".. நெட்டிசனின் போஸ்ட்.. போலீசின் வேறலெவல் ரிப்ளை..!

மற்ற செய்திகள்
